• Mi. Okt 20th, 2021

இன்று வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு (1987 ஆம் ஆண்டு)

Vonராஜா

Jul 29, 2017
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

இன்று ஜூலை மாதம் 29 ஆம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நா ள்
40 வருட அரசியல் சாணக்கியன் ஜேஆரிடம் தோற்றுப்போன 40 வயது ராஜிவ் காந்தி….!
இன்று ஜூலை மாதம் 29 ஆம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நா ள்1987 ஆம் ஆண்டு மே மாதம 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இடம் பெற்ற் இராணுவத் தாக்கு தலின் பொழுது 647 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்ட துடன் ஆயிரக்

கணக்கான வீடுகளும் அழிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து பெரும் வெற்றிக் களிப்பில் மிதந்த ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது போல்,ஜூலை மாதம் 22ஆம்திகதி யாரும் எதிர்பார்த்திருக்காத நேரத்தில் நெல்லியடி மத்திய கல்லூரியில்

முகாமிட்டிருந்த ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை இலக்கு வைத்து, கப்டன் மில்லரின் தலைமையிலான கரும்புலித் தாக்குதலின் பொழுது ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.இந்தத் தாக்குத லிகனால் அதிர்ந்து

போன ஜேஆரின் அரசு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது விழி பிதுங்கிய போது இந்திய அரசைத் தனக்குத் துணையாக அழைக்கவேண்டுமென்று முடிவெடுத்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அப்போது இந்தியப் பிரதமராக இருந்த 40 வயதே ஆன ராஜிவ் காந்தியை அணுகி யதைத் தொடர்ந்தே,இலங்கையின் இறைமைக்கான சவால்களும் ஆரம்பமாகியது.

இராஜிவ்-ஜே.ஆர் இருவரினதும் இரகசிய உடன் படிக்கைகக்கு அமைவாக 40 வருட அரசியல் அனுபவம் பெற்றிருந்த ஜே.ஆர.ஜெயவர்த்தனாவின் தந்திரமான பேச்சை நம்பிய இந்திய அரசு,திடீரென்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் ,ஜூலை மாதம் இந்திய மிக் விமானங்களின் மூலம் உணவுப் பொட்டலங்கைளைப் போட்டு, தமிழ் மக்களின் காவலர்கள் தாமே என்ற போர்வையில் இந்திய அரசு இலங்கைக் குள் காலடி எடுத்து வைத்தது.

அதற்கமையவே 1987 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 29 ஆம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கொழும்பில் வைத்துக் கைச்சாத்திட்ட பொழுது, இலங்கை அரசின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வும், இந்திய அரசின் சார்பில் இந்தியப் பிரதமர் ராஜிவ் வகாந்தியும் கையெழுத் திட்டனர்.ஆனால் இதில் முக்கியமான ஒரு

தரப்பாகத் தமிழர்களின் சார்பில், கையெழுத்திட்டிருக்க வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் கையெழுத்திட அழைக்கப் பட்டிருக்கவில்லை. அதனால் இது ஒரு தலைப்பட்சமான ஒப்பந்தம் என அரசியல் விமர்சகர்களினால் வருணிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாகக் கையெழுத்திட்டு இருவருக்கும் இடையில் ஒப்பந்தத்தின் பிரதிகளை கை மாற்றப்பட்டபின் ,ஜூலை மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று வெற்றியுடன்; விடைபெற்ற இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையின் முன்னால் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றது.

அப்பொழுது கடற்படையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டபடி வந்து கொண்டிருந்த ராஜிவ் காந்தி மீது அணிவகுப்பு வரிசையில் நின்ற 19 வயதேயான விஜிதமுனி றோகண டீ சில்வா ( Wijithamuny Rohana De Silva) என்ற கடற்படைச் சிப்பாய், தனது கைகளில் வைத்திருந்த றைபிளினால் பின்புறமாகத் தலையில் தாக்கினான், தாக்குதல்

நடைபெறுவதற்கு முன் அங்கே ஏற்பட்டிருந்த சிறு சலசலப்பின் மூலம் ஏதோ ஒன்று நடக்கப்போவதை உணர்ந்து கொண்ட ராஜிவ் காந்தி திடீரெனப் பாய்ந்து முன்னோக்கிச் சரிந்ததால், மயிர் இழையில் மரணத்தின் வாயிலில் இருந்தும் தப்பித்துக் கொண்டார்.

இந்தத் தாக்குதல் பற்றி, ராஜிவ் காந்தி குறிப்பிடும் பொழுது, “நான அணிவகுப்பு மரியாதையைப் பார்த்துக் கொண்டு வந்த பொழுது, மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்தேன்….அப்பொழுது ஒரு இடத்திற்கு வந்ததும்,சிலவிதமான அசைவைக் கண்ட பொழுது, திடீரென ஒரு சிப்பாய் தனது கையில் வைத்திருந்த றைபிளின்

பிடியினால், எனது தோள்பட்டை மற்றும் தலையில மிகவும் பலமாகத் தாக்கினான்…நான் சடுதியாகத் திரும்பி விழுந்ததால், அவனது இலக்குத் தவறி விட்டது….” அன்று இந்தியப் பிரதமரை அழைத்த ஜூனியஸ் றிச்சாட் ஜெயவர்த்த னாவின் தந்திரமான மூளைக்குப்

பலியாகிய ராஜிவ் காந்தியினால் ஈழத் தமிழர் களையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்காக பல இலட்சக் கணக்கிலான இந்திய இராணுவத்தினரைக் கொண்டு வந்து குவித்து தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதேவேளை ஜே.ஆர்ஜெயவர்த்தனா தனது இராணுவத் தினரை மிகவும் பாதுகாப்பாக முகாம்களி னுள் வைத்திருந்தார்…இறுதியில் இந்தியப் படையினர் தோல்வி அடைந்த நிலையில் தனது நான்னகாவது வல்லரசு என்ற ஸ்தானத்தையும் இழந்து ஈழ மண்ணை விட்டு 1990 ஆம் ஆண்டு அவமானத்துடன் வெளி யேறினர் என்பது இந்திய அரசைப் பொறுத்த வரையில் மிகவும் துன்பியல் நிகழ்வுதான்…..!

ஆனால் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடம் ஏமாந்து போகாது தமிழர் தரப்புக்களுடன் அந்த நேரம் இணைந்து செயற்பட்டிருந்தால்,இன்று இந்தியா புகழின் உச்சியில் இருந்திருக்கும்…..தமிழர்களின் பாதுகாவலர் என்ற பெயரையும் இந்தியா பெற்றிருக்கும்…..!

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.