• Mo. Okt 18th, 2021

கொடிய நோய்யால் ஜேர்மனியர்கள் தாக்கம் ஆய்வில் தகவல்

Vonராஜா

Mrz 24, 2018
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

ஜேர்மனியில் மூன்றில் இரு பங்கு குடிமக்கள் தனிமை என்னும் கொடிய மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் பிரபல ஆய்வு நிறுவனமான ARD – GermanyTrend நடத்திய தனிமை குறித்த மக்களின் புரிதலுக்கான ஆய்வு முடிவுகள் நேற்று வெளியானது.

அதில் 51 சதவிகிதமான ஜேர்மனியர்கள், ‚தனிமை‘ என்பது பெரிய பிரச்சனை என்றும், 17 சதவிகித மக்கள் மிகப்பெரிய பிரச்சனை என்றும் வாக்களித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 23 சதவிகித நபர்கள் தனிமையை சிறிய பிரச்சனை தான் என்றும் தனிமை ஒரு பிரச்சனையே இல்லை என 6 சதவிகித மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தனிமையால் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

முன்னதாக 16,000 ஜேர்மனியர்களிடம் பிரபல உளவியலாளர் மைக் லுஹ்மன் நடத்திய ஆய்வில், வாழ்க்கையின் அங்கமான 30 வயதில் தான் தனிமையால் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையை மாற்ற அரசியலில் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

பிரித்தானியாவில் இந்த நோயை எதிர்கொள்ள தனிப்பிரிவு இயங்கி வருவதை மேற்கோள் காட்டி, ஜேர்மனியிலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஜனநாயக கட்சியின் சுகாதார நிபுணர் கார்ல் லடர்பாக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கிறித்துவ ஜனநாயக கட்சியின் பேச்சாளர் மார்கஸ் வெயின்பர்க், தனிமையில் தவிக்கும் நபர்களை அபசகுனமாக கருதி புறக்கணிக்காமல் அவர்களின் கருத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என கடந்த ஜனவரியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது..

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

/>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.