• Mi. Okt 20th, 2021

எரிக்கப்பட்ட யாழ்.பொது நூலகம் 38 ஆவது ஆண்டு நிறைவு நினைவேந்தல்

Vonராஜா

Jun 2, 2019
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.ரெலோ அமைப்பின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில்

குறித்த நிகழ்வு 01,06,2019, (சனிக்கிழமை) நடைபெற்றுள்ளது.இதன்போது அக வணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் நிறுவுநர் புத்தூர் சக்கடத்தார் க.மு செல்லப்பா, மற்றும் நூலகம்

எரிகிறது என்ற செய்தி கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சென். பக்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியர் வண.கலாநிதி ஹயசிங்.சிங்கராயர் டேவிட் ஆகியோரின் உருவப் படங்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து

நூலகத்துக்கு முன்னால் வாழைக் குத்திவைக்கப்பட்டு. மண்சட்டியில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.குறித்த நிகழ்வில் ரெலோவின் உள்ளூராட்ச்சி சபை உறுப்பினர்கள் கலந்து

கொண்டிருந்தனர்.யாழ்.நூலகம் எரிக்கப்பட்டமையினால் ஏறக்குறைய 97000 புத்தகங்களை தமிழ் இனம் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.