• Di. Okt 19th, 2021

சிராம்பியடிச் சந்தியில் மினி பேருந்து விபத்து குடும்பஸ்தர் பலி

Vonராஜா

Jun 23, 2020
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

பலாலி வீதி- பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில்.23-06-20. காலை 7.30 மணியளவில் மினி பேருந்து – உந்துருளி மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் காவல் துறையினர் தெரிவித்தனர்..வடக்கம்பரை – பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்தார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும் மினி பேருந்தே விபத்துக்குள்ளாகியது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.