• Mi. Okt 20th, 2021

டெங்கு நேயின் தாக்கம் மட்டக்களப்பில் அதிகரிப்பு மக்களுக்கு எச்சரிக்கை

Vonராஜா

Jun 30, 2020
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Share

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்குப் பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மாவட்டத்தில் ஜுன்- 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஜுன்- 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதம் டெங்குத் தொற்றுக்கு ஆளாகிய அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இறப்புக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 08 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 05 பேரும் கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை.

பிரிவில் 3 நோயாளர்களும், ஆரையம்பதிப் பிரிவில் 2 பேரும், வாழைச்சேனை களுவாஞ்சிக்குடி ஆகிய பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 20 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வாகரை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு, காத்தான்குடி, வெல்லாவெளி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.